அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர் மயங்கி விழுந்து சாவு


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 28 Nov 2018 4:11 AM IST (Updated: 28 Nov 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள், அந்த நபரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story