12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்


12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 28 Nov 2018 4:42 AM IST (Updated: 28 Nov 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 12 வட்டார வளர்ச்சி அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் சிவகங்கை ஒன்றிய கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அதிகாரியாக மாறறப்பட்டார். ஏற்கனவே இங்கிருந்த நிர்மல்குமார் சிவகங்கையில் விடுப்பு மற்றும் பயிற்சி வட்டார வளர்ச்சி அதிகாரியாக மாற்றப்பட்டார்

சிவகங்கையில் விடுப்பு மற்றும் பயிற்சி வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய இளங்கோ காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.

ஏற்கனவே அங்கு பணியாற்றிய சந்திரா சிவகங்கை உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். சிவகங்கை உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய சுந்தரமகாலிங்கம் சிங்கம்புணரியில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அதிகாரியாக மாற்றப்பட்டார்.

ஏற்கனவே அங்கு பணியாற்றிய ரஜினிதேவி சிவகங்கை ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியாக மாற்றப்பட்டார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய ஆனந்தலெட்சுமி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவில் மேலாளராக மாற்றப்பட்டார்.

ஏற்கனவே அங்கு பணியாற்றி வந்த பிரதீப் திருப்பத்தூர் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அதிகாரியாக மாற்றப்பட்டார். திருப்பத்தூர் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய என்.சந்திரா சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கிருந்த ஹேமலதா சிவகங்கையில் உள்ள உதவி இயக்குனர் ஊராட்சிகள் அலுவலக கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார்.

சிவகங்கையில் உள்ள உதவி இயக்குனர் ஊராட்சிகள் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றிய உமா சாக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கிருந்த சரவணபவன் கண்ணங்குடி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அதிகாரியாக மாற்றப்பட்டார்.


Next Story