வீட்டிலேயே ஐஸ் கிரீம் தயாரிக்கலாம்
கோடைக்காலத்தில் மட்டுமல்ல விரும்பும் நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
குழந்தைகளுக்குப் பிடித்த ஐஸ் கிரீம்களை வீட்டிலேயே தயாரித்து தர முடிந்தால் அது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்தானே.
இதன் மூலம் வீட்டிலேயே சுகாதாரமான பிரசர்வேடிவ் (உணவு கெடாமலிருக்க சேர்க்கப்படும் ரசாயனம்) கலப்பு இல்லாத ஐஸ் கிரீம்களைத் தயாரிக்க உதவுகிறது கிச்சனிப் என்ற பெயரில் வந்துள்ள ஐஸ்கிரீம் மேக்கர்.
இதில் 30 நிமிடங்களில் ஐஸ்கிரீம் தயாரிக்க முடியும். இது 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதனால் குடும்பத்தினர் மட்டுமின்றி விருந்தினர்களுக்கும் தேவையான ஐஸ் கிரீமை தயாரிக்க முடியும்.
இதில் நீங்கள் விரும்பும் ஐஸ் கிரீம் மட்டுமின்றி பழங்களைப் போட்டு புரூட் சாலட் தயாரிக்கவும் முடியும். இது ஓராண்டு உத்தரவாதத்துடன் வந்துள்ளது. இதன் விலை ரூ.3,870 ஆகும்.
Related Tags :
Next Story