மாத்திரை, தண்ணீர் பாட்டில்
நேரத்திற்கு மாத்திரை சாப்பிட உதவுவதற்காக வந்துள்ளது மாத்திரை, தண்ணீர் பாட்டில்.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வயதானவர்கள் பெரும்பாலும் மாத்திரை உதவியை நாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக நேரத்திற்கு மாத்திரை சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. இத்தகையோருக்கு உதவுவதற்காக வந்துள்ளதுதான் மாத்திரை, தண்ணீர் பாட்டில்.
இதில் ஒரு பகுதியில் தண்ணீரை நிரப்பலாம். மற்றொரு பகுதியில் மாத்திரை வைப்பதற்கென இடம் உள்ளது. இதில் மாத்திரைகளை வைத்துவிட்டால் முதியவர்கள் நேரத்திற்கு மாத்திரைகளை தேடிக் கொண்டிராமல் சாப்பிட முடியும்.
இதன் விலை ரூ.399. இதை வெளியூர் பயணத்தின் போதும் எடுத்துச் செல்லலாம். மிகவும் உதவியாக இருக்கும்.
Related Tags :
Next Story