மாவு பிசையும் கருவி
சப்பாத்தி மாவு பிசைவது என்பது மிகவும் கடினமான வேலையாகத்தான் உள்ளது.
இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் சப்பாத்தி மிக முக்கிய உணவாக இடம்பெறத் தொடங்கிவிட்டது. வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் அனைவரது தேர்வும் சப்பாத்தியாக இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும். இருந்தாலும் சப்பாத்தி மாவு பிசைவது என்பது மிகவும் கடினமான வேலையாகத்தான் உள்ளது. இதை எளிமையாக்க வந்துள்ளதுதான் ‘ஆட்டா பிசையும் கருவி’. கிளியர் லைன் அறிமுகம் செய்துள்ள இந்த கருவியின் விலை ரூ.3,499 ஆகும்.
காற்று வெற்றிடத்தின் மூலம் கிடைக்கும் பிடிமானத்தின் மூலம் இந்த கருவி செயல்படுகிறது. இதில் இரட்டை மூடி உள்ளது. இதனால் இது செயல்படும்போதே மிஷினை நிறுத்தாமல் கூடுதல் பொருட்களை சேர்க்க முடியும். இது தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை செயல்படுவதற்கான டைமர் வசதியும் உள்ளது. இதன் மூலம் ரொட்டி, புல்கா, சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுக்கான மாவு பிசைவது எளிதாகும். இதில் 650 வாட் மோட்டார் உள்ளது.
இதில் 3 லிட்டர் நான் ஸ்டிக் பாத்திரம் இருப்பதால் மாவு ஒட்டாது. இதை சுத்தம் செய்வதும் எளிது.
Related Tags :
Next Story