மோட்டார்சைக்கிள் மீது மோதிய கார் கவிழ்ந்தது செல்போன் ஊழியர்கள் உள்பட 4 பேர் படுகாயம்


மோட்டார்சைக்கிள் மீது மோதிய கார் கவிழ்ந்தது செல்போன் ஊழியர்கள் உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:30 AM IST (Updated: 28 Nov 2018 7:12 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் மீது மோதியதால் நிலைதடுமாறி ஓடிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் செல்போன் நிறுவன ஊழியர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேத்துப்பட்டு, 

சேத்துப்பட்டை அடுத்த பெரிய கொளம்மை கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தன் (வயது 29), சீனிவாசன் (19), விஜயகுமார் (22). இவர்கள் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். 3 பேரும் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

கார் நெடுங்குணம் கிராமம் பூமால் செட்டிகுளம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது, எதிரே விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த நந்தாமூர் கிராமததை சேர்ந்த ஏழுமலை (29) என்பவர் வந்த மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஏழுமலை தூக்கி வீசப்பட்டடார்.

இதனிடையே மோட்டார்சைக்கிள் மீது மோதிய கார் நிலை தடுமாறி ஓடி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்த கோவிந்தன், சீனிவாசன், விஜயகுமார் ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து ஏழுமலை உள்பட 4 பேரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறர்கள்.


Next Story