பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
பாப்பாரப்பட்டி அருகே, கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.
பாப்பாரப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரியூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சண்முகம். இவரது மனைவி அங்கம்மாள் (வயது 22). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 1 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அங்கம்மாள் தற்போது மீண்டும் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதற்கிடையில் அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சண்முகம் மனைவிக்கு மாத்திரை வாங்குவதற்காக மருந்து கடைக்கு சென்று இருந்தார். அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, அங்கம்மாள் கயிற்றில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதை பார்த்து சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் அங்கம்மாளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story