கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி.மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் எஸ்.பிரபாகர் நாளை வழங்குகிறார்


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி.மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் எஸ்.பிரபாகர் நாளை வழங்குகிறார்
x
தினத்தந்தி 28 Nov 2018 11:30 PM GMT (Updated: 28 Nov 2018 4:51 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் 10 பேருக்கு “தினத்தந்தி” கல்வி நிதி வழங்கும் விழா நாளை கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. விழாவில் கிருஷ்ணகிரி கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் கல்விநிதியை வழங்குகிறார்.

கிருஷ்ணகிரி, 

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் “தினத்தந்தி” மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி வந்தது.

2014-2015-ம் கல்வி ஆண்டில் இருந்து இந்த பரிசு திட்டமானது, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை தொடரும் வகையில் “தினத்தந்தி” கல்வி நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 340 மாணவ-மாணவிகள் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி 2017-2018-ம் கல்வி ஆண்டில் தலா ரூ.10 ஆயிரம் “தினத்தந்தி” கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

1. ஜி.சந்தியா, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி. 2. எஸ்.நேத்ரா,வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை. 3. ஜெ.பிரின்ஸி ஷாலோம், டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி. 4. பி.ரேவதி, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குந்தாரப்பள்ளி. 5. வி.கோகிலா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சூளகிரி. 6. கே.விபிஷா, ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இருமத்தூர், 7. கே.திருமலை, அரசு உயர்நிலைப்பள்ளி, ஜெகதாப் பெரியஆயகான் கொட்டாய். 8. டி.கோகுல்நாதன், அரசு உயர்நிலைப்பள்ளி, பெலவர்த்தி. 9.எம்.லோகநாதன், அரசு மேல்நிலைப்பள்ளி, அகரம், சுண்டகாப்பட்டி. 10. எம்.தினேஷ்குமார், செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை.

மேற்கண்ட 10 பேர் “தினத்தந்தி” கல்வி நிதிக்கு தேர்வு பெற்று உள்ளனர்.

இந்த 10 மாணவ-மாணவிகளுக்கு “தினத்தந்தி” கல்விநிதி வழங்கும் விழா கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வாழ்த்தி பேசுகிறார். மாவட்ட கல்வி அதிகாரி வ.ராஜா முன்னிலை வகிக்கிறார். சேலம் “தினத்தந்தி” மேலாளர் டி.ஜெகதீசன் வரவேற்று பேசுகிறார். கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி நிறுவனர் வி.எம்.அன்பரசன் நன்றி கூறுகிறார்.

Next Story