பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 17-ந் தேதி பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என விழாக்குழுவினர் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தேவராயபுரம் பகுதிகளில் தொன்று தொட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த போட்டி அமைப்பாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காளைகளுக்கும் தற்போதே பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் செல்வராசு மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-
எங்கள் ஊரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம். அதேபோல் வருகிற ஆண்டும் ஜனவரி மாதம் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story