லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றப்படும் பாறாங்கற்கள் சாலைகளில் விழுவதால் விபத்து
அளவுக்கு அதிகமாக பாறாங்கற்களை லாரிகளில் ஏற்றி செல்வதால் சாலைகளில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
நொய்யல்,
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம், நடுப்பாளையம், உப்புப்பாளையம், புன்னம், குப்பம், பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
கல்குவாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள், பாறாங்கற்கள் உள்ளிட்ட பல்வேறு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் லாரிகளில் பாறாங்கற்களை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இவர்கள் அதிவேகமாகவும் செல்கின்றனர்.
இதனால் லாரிகளில் இருந்து பாறாங்கற்கள் கீழே விழுந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி அரசு விடுமுறை தினங்களில் அதிக லாரிகள் அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றிச் செல்கின்றன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கனிமவளத் துறைக்கும், போக்குவரத்து அலுவலரிடமும் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
லாரிகளில் இருந்து கற்கள் கீழே விழுந்து விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விபத்தினை தடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story