கஜா புயலால் பாதித்த மக்களுக்காக நிவாரண தொகையை வங்கி மூலம் செலுத்தலாம்; கலெக்டர் வேண்டுகோள்


கஜா புயலால் பாதித்த மக்களுக்காக நிவாரண தொகையை வங்கி மூலம் செலுத்தலாம்; கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Nov 2018 3:45 AM IST (Updated: 29 Nov 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதித்த மக்களுக்காக நிவாரண தொகையை வங்கி மூலம் செலுத்துமாறு கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு,

கஜா புயல் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்கவும், மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பணியில் தமிழக மக்களும் ஈடுபட வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சர் கடந்த 19–ந் தேதி அறிக்கை வெளியிட்டார். அதில், ‘மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவிடவும், தமிழ்நாடு அரசால் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்’ என்று அந்த அறிக்கையில் முதல்–அமைச்சர் கூறி இருந்தார்.

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நன்கொடைகள் வழங்கி உதவ வேண்டும். நன்கொடைகள் வழங்க விருப்பம் உள்ளவர்கள் வரைவோலை மற்றும் காசோலையாக நிவாரணத்தொகையை வழங்கலாம்.

வரைவோலை எடுப்பவர்கள் ‘‘Chief Minister Public Relief fund ’’ என்ற பெயரில் எடுக்கலாம். நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்துபவர்கள் ‘‘Indian Overseas Bank. Secretariat Branch. Chennai–600 009. வங்கி கணக்கு எண்.11720 10000 00070, IFSC No.IOBA0001172, CMPRF PAN No.AAAGC0038F ’’ என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம்.

இந்த வங்கி கணக்குகளில் ஈரோடு மாவட்ட மக்கள் பெரும் அளவு நிவாரணத்தொகை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.


Next Story