மெரின் டிரைவ் கடற்கரையில் குவிந்த இலங்கை சீகல் பறவைகள்


மெரின் டிரைவ் கடற்கரையில் குவிந்த இலங்கை சீகல் பறவைகள்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:22 AM IST (Updated: 29 Nov 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

மெரின் டிரைவ் கடற்கரையில் குவிந்து உள்ள இலங்கை சீகல் பறவைகளை மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

மும்பை,

மும்பை சிவ்ரி கழிமுகப் பகுதிக்கு குளிர்காலத்தில் பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும். இந்த பறவைகள் கோடைக்காலம் தொடங்கும் வரை மும்பையிலேயே இருந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

இந்தநிலையில் இலங்கையில் அதிகளவில் காணப்படும் சீகல் பறவைகளும் இனப்பெருக்கத்திற்காக மும்பை வரத்தொடங்கி உள்ளன. புறாக்களை போல இருக்கும் இந்த பறவைகள் கடந்த சில நாட்களாக மும்பை மெரின் டிரைவ் கடற்கரை பகுதியில் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.

இந்த பறவைகளை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். பலர் சீகல் பறவைகளுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதேபோல இந்த பறவைகளின் கூட்டம் மெரின் டிரைவ் சாலையில் வாகனங்களில் செல்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

அதிகபட்சம் 2 கிலோ எடை வரை இருக்கும் சீகல் பறவைகளை மீனவர்கள் ‘‘நீர் காகங்கள்'' என்றும் அழைக்கின்றனர்.

Next Story