கங்கைகொண்டான் சிப்காட்டில் உணவு பூங்கா அமைக்க ஏற்பாடு கலெக்டர் ஷில்பா தகவல்


கங்கைகொண்டான் சிப்காட்டில் உணவு பூங்கா அமைக்க ஏற்பாடு கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2018 3:50 PM IST (Updated: 29 Nov 2018 3:50 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில் உணவு பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில் உணவு பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உணவு பூங்கா

தமிழ்நாட்டில் பல்வேறு பூங்காக்களில் முதலீடு செய்ய தொழில் முனைவோர் முன்வந்தாலும், வேளாண் விளைபொருட்களை பதப்படுத்திடும் உணவு பூங்காக்களுக்கு சில வரம்புகள் உள்ளன. தற்போதைய காலகட்டத்தில் உணவு பூங்கா அமைப்பது அவசியமான ஒன்றாகும். வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் உணவு பூங்கா அமைக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் எலுமிச்சை, வாழை, பல்லாரி, காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் பயிறு வகைகளுக்காக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன.

நிலம் தேர்வு

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உணவு பூங்காவுக்காக 33.36 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த உணவு பூங்காவில் உணவு பதப்படுத்துவற்கான சலுகைகள், செயல்படுத்தும் விதம் மற்றும் வினியோக தொடர் வேளாண்மை திட்ட உட்கட்டமைப்புகளின் திறன் குறித்து விவாதிக்கப்பட்டது.

மின்னஞ்சல் முகவரி

அரசால் ஏற்படுத்தப்பட்டு உள்ள இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும். அழுகக்கூடிய விளை பொருட்களை பதப்படுத்திட அதிக முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். உணவு பூங்காவில் உட்கட்டமைப்புகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் முதலிட்டாளர்களின் தேவைக்கேற்ப உரிய மாற்றங்கள் செய்ய வாய்ப்பு உண்டு. உணவு பூங்கா தொடர்பான தேவைகளுக்கும் விருப்பம் தெரிவிக்கவும், ஆலோசனை வழங்குவதற்கும் dd-ab.tirunelveli@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story