தென்காசி அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


தென்காசி அருகே  கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 30 Nov 2018 3:00 AM IST (Updated: 29 Nov 2018 5:58 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி, 

தென்காசி அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

தச்சு தொழிலாளி

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் சாரங்கராஜ் (வயது 25). தச்சு தொழிலாளி. இவருக்கும், தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி செட்டியார் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகள் பரமேஸ்வரிக்கும் (23) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சாரங்கராஜ் சில நாட்களுக்கு முன்பு பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு வீட்டில் தச்சு வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கணவர் இறந்ததால் பரமேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான சில நாட்களில் கணவன் இறந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று பரமேஸ்வரியின் பெற்றோர் வெளியில் சென்றுவிட்டனர். அப்போது பரமேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் பரமேஸ்வரி தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story