கோவில்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை


கோவில்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2018 10:00 PM GMT (Updated: 29 Nov 2018 1:21 PM GMT)

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் மன்னர்சாமி நகரில் தனிநபர் வீட்டின் முன்பு வாறுகாலின் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதனை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

இதையடுத்து அந்த ஆக்கிரமிப்பை அந்த வீட்டின் உரிமையாளரே அகற்ற வேண்டும் என்று தாசில்தார் பரமசிவன் உத்தரவிட்டார். ஆனால் அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, நேற்று காலையில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். 5–வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி யூனியன் ஆணையாளர் முருகானந்தம் மற்றும் மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து அங்கு நிலத்தை அளவீடு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story