‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கழுகுமலை,
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கழுகுமலை
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், கழுகுமலை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் செயல் அலுவலர் உமா தலைமையில், ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், போர்வை, துணிகள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை சேகரித்தனர்.
பின்னர் அவற்றை லோடு ஆட்டோவில் ஏற்றி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவற்றை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று, பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
உடன்குடி
இதேபோன்று உடன்குடி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் செயல் அலுவலர் வேலுச்சாமி தலைமையில், ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேகரித்தனர். பின்னர் அவற்றை மினி லாரியில் ஏற்றி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவற்றை புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு சென்று, பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
இதேபோன்று உடன்குடி சிதம்பர தெரு ஜமாத் இளைஞர்கள் சார்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் நிவாரண பொருட்களை சேகரித்து, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு சென்று, பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
Related Tags :
Next Story