புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 Nov 2018 3:45 AM IST (Updated: 29 Nov 2018 10:47 PM IST)
t-max-icont-min-icon

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் குருபரப்பள்ளியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த பொருட்களை அனுப்பும் நிகழ்ச்சி வேப்பனப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையில் 3 லாரிகளில் அரிசி மூட்டைகள் மற்றும் உணவு பொருட்கள், உடைகள் அனுப்பப்பட்டன.

இதில் முன்னாள் ஒன்றியகுழு தலைவர் ராமமுர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சகாதேவன், ராஜேந்திரன், லோகநாதன், கூட்டுறவு சங்க தலைவர் முனிசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் உணவு பொருட்கள் மற்றும் துணிமணிகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவகி, ஹேமலதா ஆகியோர் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோம்ஸ்குமார், சிவாஜி, பாரதி, சவுந்தரி, ஊராட்சி செயலாளர்கள் செங்கதிர், சசி, சக்திவேல், ஒன்றிய உதவியாளர் காமராஜ், அலுவலக பணியாளர்கள் மற்றும் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story