கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் முடிவு
கோரிக்கைகளை வலி யுறுத்தி 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
கரூர்,
கரூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, என்.எப்.டி.இ. செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கார்த்திகேயன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 3-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பி.எஸ்.என்.எல்.லுக்கு 4-ஜி அலை வரிசையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து பென்ஷன் பிடித்தம் செய்ய வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பென்ஷன் வழங்கிட வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் மாதம் 3-ந்தேதி யிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், பி.எஸ்.என்.எல். சங்க நிர்வாகிகள் அஸ்லம்பாஷா, பழனியப்பன், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story