மேகதாதுவில் அணைக்கட்ட ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணைக்கட்ட ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அணை கட்டுவதற்கான ரூ.5 ஆயிரம் கோடிக்கான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதால் தமிழக விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தமிழார்வன், முருகானந்தம், மாவட்ட பொருளாளர் ராவணன், துணைத் தலைவர் வடுகநாதன், நகர செயலாளர்கள் மாரியப்பன், பாலதண்டாயுதம், நிர்வாகிகள் தியாகராஜன், நாகராஜன், பாண்டியன், தர்மதாஸ், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
அப்போது மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு அதன் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது சட்டத்திற்கு விரோதமானது. தமிழக விவசாயிகள் ஒரு போதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டார்கள். அணை கட்ட ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story