கதிர் அறுக்கும் எந்திரம் விற்பதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி: தனியார் நிறுவன உரிமையாளர் கைது


கதிர் அறுக்கும் எந்திரம் விற்பதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி: தனியார் நிறுவன உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

கதிர் அறுக்கும் எந்திரம் விற்பனை செய்வதாக கூறி, ரூ.17½ லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஸ்பென்சர் தெரு பகுதியை சேர்ந்தவர் அம்பிகாவதி (வயது 52). இவர் திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் தவக்கல் உசேன் (43). இவர் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யம்கோட்டையில், கதிர் அறுக்கும் எந்திரங்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில், திண்டுக்கல் அருகே உள்ள கசவனம்பட்டியை சேர்ந்த வளையாபதி என்பவர், கதிர் அறுக்கும் எந்திரம் வாங்க முடிவு செய்தார்.

இதற்காக நான் பணியாற்றும் வங்கியில் ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் கடன் கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தார். மேலும் அந்த தனியார் நிறுவனத்தில் இருந்து, எந்திரத்துக் கான விலைப்பட்டியலையும் பெற்று, தகுந்த ஆவணங்களுடன் வங்கியில் சமர்ப்பித்தார். அதன் பின்னர், அவருக்கான கடன் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு காசோலையாக கொடுத்தோம்.

இதையடுத்து வளையாபதி, கடனுக்கான தவணை தொகையை செலுத்தவில்லை. இதனால் அவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தனியார் நிறுவனத்தில் இருந்து கதிர் அறுக்கும் எந்திரம் வழங் கப்படாததால், தவணைத்தொகையை செலுத்தவில்லை என்று வளையாபதி கூறினார். அதன்பின்னர் தான் இருவரும் சேர்ந்து பணத்தை மோசடி செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், தவக்கல் உசேனை கைது செய்தனர். மேலும் வளையாபதி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story