கர்நாடக ஆராய்ச்சி ஆணையம் அமைக்க முடிவு பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் குமாரசாமி பேச்சு
புதிய தொழில் தொடங்குபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க கர்நாடக ஆராய்ச்சி ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு-2018 தொடக்க விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தாவது:-
“கர்நாடக ஆராய்ச்சி ஆணையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். முதல்-மந்திரி தலைமையில் இந்த ஆணையம் செயல்படும். இந்த ஆணையம் மூலம் புதிதாக தொழில் தொடங்கு பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
தொழில்நுட்ப மார்க்கெட்டுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மாநில அரசு இந்த ஆண்டு புதிதாக 77 தொழில்களை தொடங்க முடிவு செயதுள்ளது. இந்த ெதாழில் களுக்கு தலா ரூ.50 லட்சம் உதவி வழங்கப்படும். இதற்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பின்தங்கிய பகுதிகளில் 10 தொழில்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகரமாக விளங்குகிறது. நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் 21 மில்லியன் சதுர அடி நிலத்தை தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு ஒதுக்கி இருக்கிறோம்.
இதில் பெங்களூருவில் மட்டும் 6½ மில்லியன் சதுரஅடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறையில் அதிகளவில் முதலீடுகள் வருகின்றன.
இதன் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. பெங்களூருவில் மட்டும் 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. பெங்களூருவில் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 943-ல் இருந்து 976 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. தகவல் தொழில்நுட்பங்கள், சுகாதாரம், விவசாயம், வானிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.” இவ்வாறு குமாரசாமி பேசினார்.
தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேசுகையில், “பெங்களூரு ஆராய்ச்சி நகரமாக மாறியுள்ளது. வெளி நாடுகளிலும் பெங்களூரு நகரம், பெயர் பெற்று திகழ்கிறது. நானோ தொழில்நுட்பத்தை பொருளாதார வளாச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதில் மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, பிரியங்க் கார்கே, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story