உணவகத்தில் தீயை அணைக்க சென்ற போது கியாஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி


உணவகத்தில் தீயை அணைக்க சென்ற போது கியாஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி
x
தினத்தந்தி 30 Nov 2018 5:51 AM IST (Updated: 30 Nov 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

உணவகத்தில் எரிந்த தீயை அணைக்க சென்றபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் கல்யாண், கோல்டன் பார்க் பகுதியில் சைனீஸ் உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தில் இருந்து நேற்று அதிகாலை 1 மணியளவில் புகை வெளியேறியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உணவகத்தில் எரிந்த தீயை அணைப்பதற்காக உணவக கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது உள்ளே இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள் ஜகன் அம்லே (வயது57), சந்தீப் பார்வே (35) ஆகியோர் படுகாயமடைந்தனர். 2 பேரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், ஜகன் அம்லே ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

மற்றொரு வீரர் சந்தீப் பார்வேக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீயணைப்பு வீரர் ஜகன் அம்லே விபத்தில் பலியானது தீயணைப்பு துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story