நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள் அமைச்சர் ராஜலட்சுமி அனுப்பி வைத்தார்

நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள் அமைச்சர் ராஜலட்சுமி அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 7:22 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. 35 டன் அரிசி, 5 டன் துவரம் பருப்பு, 15 டன் ரவை, 1 டன் சேமியா, ½ டன் பால்பவுடர் மற்றும் பிஸ்கட், சேலை, வேட்டி, கைலி, துண்டு, நைட்டிகள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

நெல்லை,

இந்த பொருட்களை 5 லாரிகளில் ஏற்றி நாகை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகளை கொடியசைத்து வழிஅனுப்பி வைத்தார்.

இதில் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், மனோகரன், மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாநகர மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை ஜெரால்டு, மகபூப் ஜான், கூட்டுறவு பேரங்காடி முன்னாள் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பகுதி செயலாளர்கள் மோகன், மாதவன், கிருஷ்ணமூர்த்தி, ஹயாத், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், ரமேஷ், மூர்த்தி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story