மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது


மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2018 4:15 AM IST (Updated: 30 Nov 2018 10:32 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய போலீசார் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் காவேரிப்பட்டணம், அட்கோ, சிப்காட், கே.ஆர்.பி. அணை, மத்திகிரி போலீசார் கடைகள், மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் புகையிலை பொருட்கள் விற்றதாக எர்ரஹள்ளி மாரியப்பன் (வயது 60), நரிமேடு மாரியப்பன் (40), பத்தலப்பள்ளி லட்சுமணன் (28), மொய்தீன் (36), பேடரப்பள்ளி பிகாஸ் (20), ஓசூர் கங்கா நகர் சபேந்திர மேகந்தி (28), பேடரப்பள்ளி பாரதியார் நகர் பெரிய நாயகம் (27), பெரிய மொரசுப்பட்டி நடராஜ் (24), பாலக்கோடு பார்த்திபன் (36), சென்னம்பட்டி முருகேசன் (50), கே.ஆர்.பி.அணை அன்வர் (57), கெத்தனஹள்ளி சம்பத் (46), ஓசூர் அம்மன் நகர் நாகராஜ் (27), பூனப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி (31), சோமசேகர் (34) ஆகிய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 புகையிலை பொருட்கள், பான்பராக் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்ற பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். போலீசாரின் இந்த திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story