ராயக்கோட்டை பகுதியில் குற்றங்களை தடுக்க 16 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


ராயக்கோட்டை பகுதியில் குற்றங்களை தடுக்க 16 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Dec 2018 4:15 AM IST (Updated: 30 Nov 2018 10:39 PM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை பகுதியில் குற்றங்களை தடுக்க 16 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தொடங்கி வைத்தார்.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்துக்குட்பட்ட ராயக்கோட்டை பகுதியில் குற்றங்களை தடுக்கவும், பொது இடங்களில் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் ராயக்கோட்டை தக்காளிமண்டி, கெலமங்கலம் ரோடு, ஓசூர் ரோடு, அண்ணா சிலை, நான்கு ரோடு, போலீஸ் நிலையம், காடுசெட்டிப்பட்டி சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சி.சி.டி.வி. கேமராக்களை தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சென்னியப்பன், தொழில் அதிபர் ஆர்.எம்.முனிரத்தினம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சின்னராஜ், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், ராயக்கோட்டை பகுதியில் குற்றங்களை தடுக்கும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதனை ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருந்தப்படியே கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக 24 மணி நேரமும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சி.சி.டி.வி. கேமராவை தீவிரமாக கண்காணிப்பார்கள். குற்றங்களை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Next Story