மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாமக்கல்லில் மாற்றுத் திறனாளிமாணவர் களுக்கான களுக்கான விளையாட்டு போட்டிகளில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்,
நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பார்வையிட்டார். ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர்.
இதில் நாமக்கல் வட்டாரத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 105 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், பாட்டு போட்டி, மாறுவேட போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்று பெறும் மாணவ, மாணவிகளுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறினர்.
Related Tags :
Next Story