வடபாதிமங்கலத்தில் மின்சாரம், குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


வடபாதிமங்கலத்தில் மின்சாரம், குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 4:15 AM IST (Updated: 1 Dec 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

வடபாதிமங்கலத்தில் மின்சாரம், குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர், 

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், உச்சுவாடி, மாயனூர், குலமாணிக்கம், பூசங்குடி, கிளியனூர் உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நிலையில் மின்கம்பங்களை விரைவாக சீரமைத்து மின்சாரம் வழங்க வேண்டும். குடிநீர் வினியோகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வடபாதிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கூத்தாநல்லூர்-வடபாதிமங்கலம், கோட்டூர்-வடபாதிமங்கலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story