காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்வதாக வெளியான தகவல் வதந்தி சித்தராமையா பேட்டி


காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்வதாக வெளியான தகவல் வதந்தி சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 1 Dec 2018 4:00 AM IST (Updated: 1 Dec 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாததால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் மும்பை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தராமையாவிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. எங்கள் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் எதற்காக அவர்கள் மும்பை செல்கிறார்கள்?. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதுபற்றி அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்” என்றார்.

அதிருப்தியில் உள்ள பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. கூறுகையில், “நான் எங்கும் போகவில்லை. செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் கட்சி தலைவர்கள் பிரச்சினையை தீா்ப்பார்கள்” என்றார்.

Next Story