மைசூருவில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் நடிகர் அம்பரீஷ் பெயரில் திரைப்பட நகரம் முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு
மைசூருவில் நடிகர் அம்பரீஷ் பெயரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று பெங்களூருவில் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார்.இந்த திரைப்பட நகரம் 110 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.
பெங்களூரு,
கன்னட திரையுலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர், நடிகர் அம்பரீஷ். இவர் கடந்த 24-ந்தேதி இரவு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், நடிகர்-நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் கன்னட திரையுலகம் சார்பில் மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவஞ்சலி கூட்டம் பெங்களூரு அம்பேத்கர் பவனில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என்பது அம்பரீசின் விருப்பமாக இருந்தது. அதற்காக நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இடத்தை ஒதுக்கி கொடுத் தேன். அங்கு பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகளுக்கு இன்னும் வேகம் கொடுத்து, அம்பரீஷ் பெயரிட வேண்டும்.
அம்பரீசுக்கு உதவி செய்யும் குணம் இருந்தது. அவர் சிறந்த மனிதர். அம்பரீஷ் முரட்டுத்தனமாக பேசினாலும், அவரிடம் நல்ல இதயம் இருந்தது. அம்பரீஷ் மரணம், திரைத்துறைக்கு ெபரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது.
அம்பரீசுக்கு இருந்த நட்பு வட்டம் வேறு யாருக்கும் இல்லை. 1973-ம் ஆண்டு அம்பரீஷ் எனக்கு அறிமுகமானார். அப்போது நான் வக்கீலாக பணியாற்றி கொண்டிருந்தேன். அப்போது அவர் நாகரஹாவு படத்தில் நடித்திருந்தார். இறுதி வரை எங்களுடைய நட்பில் எந்த பாதிப்பும் இருந்தது இல்லை.
அரசியலாக இருந்தாலும், திரைத்துறையாக இருந்தாலும் அவருக்கு எதிரிகளே இல்லை. முதல் முறையாக அவரை நாங்கள் கட்டாயப் படுத்தி தேர்தலில் போட்டியிட வைத்தோம். திரைத் துறையில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை அவர் தீர்த்து வைப்பார். இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இதைதொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி பேசுகையில், “சித்தராமையா கேட்கும் போது இல்லை என்று சொல்ல முடியாது. அதனால் மைசூருவில் அம்பரீஷ் பெயரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும். நடிகர் ராஜ்குமார் பெயரில் திரைப்பட பல்கலைக்கழகம் ராமநகரில் தொடங்கப்படும்” என்றார்.
முதல்-மந்திரி குமாரசாமி தான் பதவி ஏற்ற பிறகு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ராமநகரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் மைசூருவிலேயே திரைப்பட நகரத்தை அமைக்க வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது சித்தராமையாவின் கோரிக்கையை ஏற்று மைசூருவில் அம்பரீஷ் பெயரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று குமாரசாமி அறிவித்து இருப்பதும், இந்த திரைப்பட நகரம் 110 ஏக்கர் பரப்பளவில் அமைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story