ராமேசுவரத்தில் பலத்த மழை; கடல் கொந்தளிப்பால் அரிச்சல்முனை கடற்கரையை தண்ணீர் சூழ்ந்தது


ராமேசுவரத்தில் பலத்த மழை; கடல் கொந்தளிப்பால் அரிச்சல்முனை கடற்கரையை தண்ணீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 1 Dec 2018 4:45 AM IST (Updated: 1 Dec 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் பயங்கர கடல் கொந்தளிப்பு அரிச்சல்முனை கடற்கரையை கடல் நீர் சூழ்ந்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் ராமேசுவரம் சந்தனமாரியம்மன் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அரிச்சல்முனை வடக்கு கடற்கரை மணல் பரப்பு பகுதியை கடல் நீர் சூழ்ந்தது. கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காமல் இருக்கும் வகையில் கடலோர போலீசார் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடல் கொந்தளிப்பால் கடல் நீர் சூழ்ந்ததை சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்வதுடன் மணல்பரப்பில் சூழ்ந்து நிற்கும் கடல்நீரில் இறங்கி செல்பி எடுத்து செல்கின்றனர்.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:– கமுதி2, பாம்பன் 48.7, பரமக்குடி 3.9, ராமநாதபுரம் 3.5, திருவாடானை 21.8, தொண்டி 24, மண்டபம் 54, ராமேசுவரம் 66.8, தங்கச்சிமடம்–50.6, வட்டாணம் 18, தீர்த்தாண்டதானம் 17, ஆர்.எஸ்.மங்கலம் 4, வாலிநோக்கம் 1. சராசரி மழைஅளவு 19.71.


Related Tags :
Next Story