நெல்லித்தோப்பு தொகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க நாராயணசாமி உத்தரவு
நெல்லித்தோப்பு தொகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பீட்டர் நகர், சத்யா நகர், வெண்ணிலா நகர் பகுதியில் நடைபெறும் சாலை மற்றும் வாய்க்கால் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் அண்ணாநகரில் உள்ள நெல்லித்தோப்பு சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மூலம் இலவச சலவை பெட்டி மற்றும் முடி திருத்தும் கருவிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். அப்போது 16 பேர்களுக்கு சலவை பெட்டிகளும், 4 பேருக்கு முடி திருத்தும் கருவியும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story