மார்த்தாண்டத்தில் மர்ம நபரால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாவு


மார்த்தாண்டத்தில் மர்ம நபரால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாவு
x
தினத்தந்தி 1 Dec 2018 5:29 AM IST (Updated: 1 Dec 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் மர்ம நபரால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே பரக்குன்று என்ற இடத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 63). இவர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு நிர்மலா (53) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சுந்தர்ராஜ் பணி ஓய்வுக்கு பிறகு மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு, இவர் ஆலயத்தில் பணியில் இருந்த போது மர்மநபர் அங்கு சுற்றி திரிந்தார். அந்த நபர் கம்பால் சுந்தர்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே மர்ம நபர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சுந்தர்ராஜை தாக்கிய நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சியை அடிப்படையாக கொண்டு மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story