வாயு அடர்த்தியால் அதிகரிக்கும் உலக வெப்பநிலை!


வாயு அடர்த்தியால் அதிகரிக்கும் உலக வெப்பநிலை!
x
தினத்தந்தி 1 Dec 2018 4:51 PM IST (Updated: 1 Dec 2018 4:51 PM IST)
t-max-icont-min-icon

வாயுக்களின் அடர்த்தியால், உலக வெப்பநிலையை அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் உள்ள முக்கிய வாயுக்களின் அடர்த்தி, உலக வெப்பநிலையை அதிகரித்துள்ளதோடு, கடந்த ஆண்டு புதிய உயர்வை எட்டியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர வாயுப் பதிவு அறிக்கையின்படி உலக வானியல் அமைப்பு இந்த உயரும் போக்கு குறைவதற்கான வாய்ப்புகளே இல்லை எனத் தெரிவித்துள்ளது.

கார்பன்-டை-ஆக்சைடு அளவுகள் கடந்த ஆண்டு ஒரு மில்லியனுக்கு 405 பகுதியாக இருந்ததாகவும், இது கடந்த பல லட்சம் ஆண்டுகளில் காணப்படாதது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு தடை செய்யப்பட்ட வாயு மீண்டும் வளிமண்டலத்தில் அடர்த்தி யாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சில வாயுக்கள் கடல்கள், நிலங்கள் மற்றும் மரங்கள் மூலம் உறிஞ்சப்படுவதால் வளிமண்டலத்தில் எஞ்சியுள்ள வாயுக்களையே இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.

இந்த நீண்ட காலம் நிலைக்கக்கூடிய வாயுக்களின் தாக்கம், 1990-ம் ஆண்டில் இருந்து 41 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Next Story