கல்லிடைக்குறிச்சி அருகே மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் ரவுடி கைது


கல்லிடைக்குறிச்சி அருகே மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் ரவுடி கைது
x
தினத்தந்தி 2 Dec 2018 3:00 AM IST (Updated: 1 Dec 2018 5:42 PM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சி அருகே மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

அம்பை, 

கல்லிடைக்குறிச்சி அருகே மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

கழுத்தறுத்து கொலை

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொன்மா நகர் முதல் தெருவைச் சேர்ந்த கருப்பையா மனைவி புஷ்பம் (வயது 65). கருப்பையா இறந்த நிலையில் அவரது மகன் ஜெயசிங் மற்றும் புஷ்பம் ஆகிய இருவரும் பொன்மாநகரில் வசித்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14–ஆம் தேதி ஜெயசிங் வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிய போது புஷ்பம் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கெளரி மனோகரி தலைமையில் போலீசார் முரளி, இசக்கிராஜா, ராஜே‌ஷ ஆகியோர் அடங்கிய தனிப்படை கொலையாளியை தேடி வந்தனர்.

ரவுடி கைது

போலீசாரின் விசாரணையில் வீரவநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீகாந்த் (32) என்பவர் புஷ்பத்தைக் கொலை செய்து, அவர் அணிந்திருந்த 15 கிராம் தங்க செயின் மற்றும் 6 கிராம் கம்மலை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்தை தேடிவந்த நிலையில் தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட ரவுடி ஸ்ரீகாந்த் மீது கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாப்பாக்குடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் பிடிவாரண்டுகள் அவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story