தாமரைபாக்கம், கெருகம்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


தாமரைபாக்கம், கெருகம்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:15 PM GMT (Updated: 1 Dec 2018 6:52 PM GMT)

தாமரைபாக்கம், கெருகம்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தாமரைபாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் தனி தாசில்தார் தமிழ்செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 60 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் அருணா, கிராம நிர்வாக அதிகாரிகள் சர்வேஸ்வரி, ஜெயந்தி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட 60 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து திருவள்ளூர் தனி தாசில்தார் தமிழ்செல்வி பெற்றுக்கொண்டு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி உடனடி தீர்வு காணப்பட்ட 7 மனுக்களுக்கு அதற்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மீதி உள்ள 53 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி 30 நாட்களில் தீர்வு காண உத்தரவிட்டார். முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் செல்வம், முத்து, கோதண்டம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். முடிவில் கிராம உதவியாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கெருகம்பாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் நந்தகோபால் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் ஆதிலட்சுமி வரவேற்றார். துயர்துடைப்பு தாசில்தார் லதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த முகாமில் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 25 பேர் துயர் துடைப்பு தாசில்தார் லதாவிடம் மனுக்களைஅளித்தனர்.

அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் சுஜாதா, கிராம உதவியாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கவிதா, மண்டல துணை தாசில்தார் பூபாலன், படப்பை ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பழனி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 24 பேருக்கு ஸ்மார்ட்கார்டு, 17 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஒருவருக்கு பட்டா வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 17 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் கோபி, படப்பை வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி காவனூர் அ.தி.மு.க கிளை செயலாளர் கே. எல் வேங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுகாதார துறை சார்பில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யபட்டு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Next Story