மதுரவாயலில் நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை
மதுரவாயலில் நர்சிங் மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
மதுரவாயல் ஆலப்பாக்கம், செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை(வயது 40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மகள் தஞ்சையம்மாள்(17). இவர், ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 28-ந் தேதி கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த தஞ்சையம்மாள், தனது அறைக்குள் சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தஞ்சையம்மாள் உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தஞ்சையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story