பிரச்சினைகளை நேரில் கேட்டு அறிய காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பேன் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
பிரச்சினைகளை நேரில் கேட்டு அறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறாத காரணத்தால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை, அரசின் மூத்த அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும், கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி ஆட்சியில் பிரச்சினைகளை சந்திப்பதாக கூறினால், அதனை தீர்த்து வைக்க தயாராக உள்ளேன். பெங்களூருவில் வருகிற 8-ந் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நானும் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். இதுபற்றி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் தினேஷ் குண்டுராவிடம் அனுமதி கேட்டேன். அவர்களும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கூறியுள்ளனர். அதனால் 8-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன்.
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறும் குற்றச்சாட்டு, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நானே நேரில் கேட்டு அறிந்து கொள்ள உள்ளேன். அந்த கூட்டத்திலேயே அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து பேசினால், தேவையில்லாமல் எழும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Related Tags :
Next Story