மனநலம் பாதித்த சிறுமியை கடத்தி கற்பழித்த 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில்


மனநலம் பாதித்த சிறுமியை கடத்தி கற்பழித்த 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 2 Dec 2018 3:00 AM IST (Updated: 2 Dec 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதித்த சிறுமியை கடத்தி கற்பழித்த 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து அலிபாக் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

ராய்காட் மாவட்டம் அலிபாக் தாலுகா பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி, தாய் இறந்து விட்டதால் தந்தையுடன் வசித்து வருகிறாள். கடந்த 2014-ம் ஆண்டு சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போய் விட்டாள். சிறுமியின் தந்தை பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் அவர் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கப்போலி ரெயில் நிலையம் அருகே சிறுமி நடமாடி கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பகவான் கோட்டேகர், தீபக் பாட்டீல், ராம்நாத் மாத்ரே, மோரேஸ்வர் ஆகிய 4 பேர் சிறுமியை கடத்தி சென்று கற்பழித்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் 44 முதல் 50 வயது கொண்டவர்கள் ஆவர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கடத்தி கற்பழித்த 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை அலிபாக் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில், வழக்கு விசாரணையின் போது மோரேஸ்வர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மற்ற 3 பேர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, 3 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Next Story