ஆபத்தான புளியமரத்தின் கிளைகள் வெட்டி அகற்றம்


ஆபத்தான புளியமரத்தின் கிளைகள் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:00 AM IST (Updated: 2 Dec 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

ஆபத்தான புளியமரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப் பட்டது.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே கரூர்-தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் தனியார் பள்ளி அருகே சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் பழமையான புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் கிளைகள் ஒடிந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சாலை வழியாக பொதுமக்கள் ஏராளமான பஸ்கள், லாரிகள், மோட்டார் சைக்கிளில் சென்று வந்தனர். இந்த நிலையில் பலத்த காற்றுக்கு புளியமரத்தின் கிளைகள் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படக்கூடும் என்பதால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை தினத்தந்தி நகர்வலத்தில் செய்தியாக வெளி யிடப்பட்டது.

அகற்றம்

இதன் எதிரொலியாக உடனே நெடுஞ் சாலைத்துறையினர் ஒடிந்து விழும் நிலையில் இருந்த புளியமரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

Next Story