கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் 8-ந்தேதி நடக்கிறது


கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் 8-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 2 Dec 2018 3:45 AM IST (Updated: 2 Dec 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

வழக்குகளுக்கு சமசர தீர்வு காணும் பொருட்டு கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

கரூர்,

தேசிய சட்ட பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 8-ந்தேதி (சனிக் கிழமை) கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், வங்கிகள் வராக்கடன் வழக்குகள், சிவில் வழக்குகள், குற்றவியல் சமரச வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட பண நிலுவைகள், குடிநீர் மற்றும் மின்கட்டணம் சம்பந்தப்பட்ட வழக்கு களுக்கு சமரச தீர்வு காணப்பட உள்ளது.

சமரச தீர்வினை எட்டுகிற வழக்குகளுக்கு நிவாரண தொகை அன்றைய தினமே காசோலையாக வழங்கப் படும். மேலும் சமரச தீர்வு எட்டுகிற வழக்குகளுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் உடனடியாக திருப்பி வழங்கப்படும். எனவே வக்கீல்கள் வருகிற 8-ந்தேதி சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story