மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Dec 2018 5:30 AM IST (Updated: 2 Dec 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைக்கால்;

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட ஒப்புதல் அளித்த மத்திய அரசைக் கண்டித்து காரைக்காலில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் தலைமை தாங்கினார். தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, புதுச்சேரி படைப்பாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து வருகிற 4–ந் தேதி திருச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்வது

மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி புதுச்சேரி அரசின் சார்பில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story