முகமும்.. நோய் பாதிப்பும்..


முகமும்.. நோய் பாதிப்பும்..
x
தினத்தந்தி 2 Dec 2018 3:23 PM IST (Updated: 2 Dec 2018 3:23 PM IST)
t-max-icont-min-icon

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்.

கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். சருமத்தில் வறட்சி, உதடுகளில் வெடிப்பு போன்ற அறி குறிகள் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்றநிலை ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டும். உடலில் நீரின் அளவு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தைராய்டு, நீரிழிவு பற்றிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். சருமத்தில் வறட்சி, உதடுகளில் வெடிப்பு போன்ற அறி குறிகள் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்றநிலை ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டும். உடலில் நீரின் அளவு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தைராய்டு, நீரிழிவு பற்றிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சில பெண்களுக்கு கன்னம், உதட்டின் மேல்பகுதி, தாடை மீது தேவையற்ற முடிகள் வளர்ந்திருக்கும். அது உடலில் ஹார்மோன்கள் சமநிலையில் இல்லை என்பதை குறிக்கும். கருப்பைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹார்மோன் குறைபாட்டிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கண்களின் அடிப்பகுதியில் உள்ள சதையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதும் உடல் நல பாதிப்பை குறிக்கும். கண்கள் சோர்வடைந்திருந்தாலும், வீங்கியிருந்தாலும் அது நாள்பட்ட ஒவ்வாமை பிரச் சினையாக இருக்கக்கூடும். சருமம் திடீரென்று வெளிறிய நிறத்திற்கு மாறி இருந்தால் அது ரத்த சோகைக்கான அறிகுறியாகும். சிலருக்கு கன்னம் மற்றும் உடல் பகுதியில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். அது குடல் அழற்சி நோய் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். செரிமானத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு நேரும்.

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் போல் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். அவை அதிக அளவில் இருந்தால் டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். பெரும்பாலானவர்களுக்கு முடி உதிர்தல் கவலை தரும் பிரச்சினையாக இருக்கிறது. அத்துடன் கண் இமைகள், புருவங்களில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கினால் அவர் கள் உடனடியாக உடலை பரிசோதிக்க வேண்டும்.

Next Story