புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சாமி வேடம் அணிந்து நிதி திரட்டிய நாடக கலைஞர்கள்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சாமி வேடம் அணிந்து நிதி திரட்டிய நாடக கலைஞர்கள்.
வரதராஜன்பேட்டை,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தஞ்சாவூரை சேர்ந்த தனி திறமையாளர்கள் களம் அமைப்பின் சார்பில் நேற்று அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடை வீதி பகுதியில் கலை நிகழ்ச்சி நடத்தினர். அதில் விஜயராணி என்கிற திருநங்கை சாமி வேடம் அணிந்து மேளதாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடினார். தொடர்ந்து நாடக கலைஞர்கள் நிதி திரட்டினர். இதனை பார்த்த பொதுமக்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் அவர்களை பாராட்டினர்.

Related Tags :
Next Story