தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி: ‘சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தால்தான் மாணவர்கள் வெற்றி பெற முடியும்’ - போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பேச்சு


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி: ‘சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தால்தான் மாணவர்கள் வெற்றி பெற முடியும்’ - போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2018 3:30 AM IST (Updated: 3 Dec 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

‘சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தால் தான் மாணவர்கள் வெற்றி பெற முடியும்‘ என்று போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறினார்.

தூத்துக்குடி,


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், குரூப்-1, குரூப்-2 ஆகிய போட்டி தேர்வுகளுக்கான இலவச கருத்தரங்கு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார். முதுநிலை வருவாய் உதவியாளர் சரவணவேல்ராஜ் வரவேற்று பேசினார். உதவி கலெக்டர் சிம்ராஜித்சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகிறது. இந்த தூத்துக்குடி மாநகரில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையமோ, புத்தகங்களோ, போதுமான நூலக வசதியோ இல்லை என்று தெரிந்து கொண்டேன். இது தொடர்பாக கலெக்டர், மாநகராட்சி ஆணையாளருடன் நான் விவாதித்து உள்ளேன். தற்போது மாநகராட்சி சார்பில் பயிற்சி தொடங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற பயிற்சி மூலம் மாணவ-மாணவிகள் வெற்றி பெற உதவ முடியும். கல்வி சமூகத்தில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு சிறிய தேர்வு மூலம் உயர்ந்த பதவியை அடைய முடியும். இந்த தேர்வில் வெற்றி பெற குறைந்தது 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். இந்த உயர்பதவிகள் மூலம் மக்களுக்கு பணியாற்ற முடியும்.

பொதுவாக அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் 80 சதவீதம் பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக் கும். 20 சதவீதம் மட்டுமே சம்பந்தப்பட்ட தேர்வுக்கு ஏற்ப மாறுபடும். அதனை கவனத்தில் கொண்டு படிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியம் இருந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும். மாணவ-மாணவிகள் ஆங்கில மொழித்திறனை வளர்த் துக் கொள்ள வேண்டும். வெற்றிக்கு வழிகாட்டுதல் முக்கியமானது. வழிகாட்டுதலுடன், உங்கள் கடின உழைப்பும் இருந்தால் எளிதில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா நன்றி கூறினார். 

Next Story