50 மலை கிராமமக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்க சனத்குமார் நதியின் குறுக்கே ரூ.3½ கோடியில் மேம்பாலம்
50 மலை கிராமமக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைப்பதற்காக சனத்குமார் நதியின் குறுக்கே ரூ.3½ கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கூறினார்.
தேன்கனிக்கோட்டை,
தளி ஊராட்சி ஒன்றியம், பென்னங்கூரில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் இளங்கோவன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பேசியதாவது:-
கடந்த நிதி ஆண்டில் 100 கால்நடை கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார். அதன்படி நமது மாவட்டத்தில் செங்கழுநீர்பட்டி, ஐகுந்தம், பச்சிகானப்பள்ளி, பென்னங்கூர் ஆகிய 4 கால்நடை கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
தளி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2011 முதல் 2018 வரையில் 7 ஆண்டுகளில் 6,275 பேருக்கு ரூ.8.11 கோடியில் 25,100 ஆடுகளும், 293 பேருக்கு ரூ.1.09 கோடியில் 293 கறவை மாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் பாலேப்பள்ளி, பின்னமங்கலம், சூடசந்திரம், தாரவேந்திரம் ஊராட்சிகளில் ரூ.34.57 லட்சம் செலவில் 267 பயனாளிகளுக்கு 1,068 ஆடுகளும், சூடசந்திரம், கொமரனப்பள்ளி, தாரவேந்திரம் மற்றும் செம்பட்டி ஊராட்சிகளில் 200 பயனாளிகளுக்கு ரூ.80.50 லட்சம் செலவில் கறவை பசுக்களும் வழங்கப்பட உள்ளது.
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் பென்னங்கூர் முதல் அலேநத்தம் வரை தார்ச் சாலையும், மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவரும், இஸ்லாமிய மக்களுக்கு நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு சுற்றுச்சுவர், ஆர்.ஓ. தண்ணீர், ஆழ்துளை கிணறுகள், தெரு விளக்குகள் போன்ற அத்தியாவசிய பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன் பாட்டிற்கு விடப்படும்.
மலை கிராமமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேளூர் முதல் அடைக்கல புரம் வரையில் சனத்குமார் நதியின் குறுக்கே ரூ.3½ கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதியுடன் விரைவில் இந்த மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மேம்பாலம் அமைந்தால் மலைப்பகுதியைச் சேர்ந்த 50 கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்கும். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக முன்னுரிமை அளிக்கப்பட்டு நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் துணை இயக்குனர் மோகன்ராஜ், உதவி இயக்குனர் சண்முகம், தாசில்தார் வெங்கடேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், அ.தி.மு.க. பிரமுகர்கள் சம்பங்கி ராமரெட்டி, வெங்கடாசலபதி செட்டி, பழனிசாமி, ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் ஜாகீர் உசேன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story