8 ஆண்டுகளாக காதலித்து சமையல் கலைஞரை கரம் பிடித்த உறவுக்கார பெண் தெலுங்கானா கவர்னரின் உதவியுடன் திருமணம் நடந்தது
8 ஆண்டுகளாக காதலித்து சமையல் கலைஞரை அவருடைய உறவுக்கார பெண் கரம் பிடித்தார். இந்த திருமணம் தெலுங்கானா கவர்னரின் உதவியுடன் நடந்தது.
பெங்களூரு,
கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா உளினூரு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் பார்கவ். நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். சித்தாபுரா கிராமத்தை சேர்ந்தவர் நிரஞ்சனி. உறவினர்களான இவர்கள் 2 பேரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் 2 பேரின் வீட்டுக்கும் தெரியவந்தது.
இதையடுத்து நிரஞ்சனியின் வீட்டில் இருந்து காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் வெங்கட் பார்கவை மறந்து விடும்படி நிரஞ்சனிக்கு அவருடைய குடும்பத்தினர் அறிவுரை கூறினார்கள். இருப்பினும், நிரஞ்சனி தனது காதலில் உறுதியாக இருந்தார். மேலும் வெங்கட் பார்கவ்-நிரஞ்சனி ஆகியோர் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
இந்த காதலுக்கு எதிர்ப்பு உள்ளதால் தங்களின் திருமணம் தடைபட்டு விடும் என்று அவர்கள் 2 பேரும் அஞ்சினர். இதுகுறித்து வெங்கட் பார்கவ் ஐதராபாத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார். பின்னர் நண்பர் மற்றும் அமைப்பு ஒன்றின் உதவியுடன் தங்களின் திருமணத்துக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர், தெலுங்கானா கவர்னர் நரசிம்மனுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கவர்னர் நரசிம்மன் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவுக்கு கடிதம் மூலம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், ‘நிரஞ்சனி-வெங்கட்பார்கவ் ஆகிய 2 பேரும் திருமண வயதை அடைந்தவர்கள். இதனால் நிரஞ்சனி முழு சம்மதத்துடன் வெங்கட் பார்கவை திருமணம் செய்ய விரும்பினால் அவர்களின் திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்பது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
இந்த கடிதத்தை தொடர்ந்து நிரஞ்சனியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் வெங்கட் பார்கவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கங்காவதி டவுன் வித்யாநகரில் உள்ள ராமமந்திரில் நேற்று வெங்கட் பார்கவ்-நிரஞ்சனி ஆகியோரின் திருமணம் நடந்தது.
அப்போது, மணமகன் வெங்கட் பார்கவ், மணமகள் நிரஞ்சனியின் கழுத்தில் தாலி கட்டினார். அவர்களை, அங்கு கூடியிருந்த அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வாழ்த்தினர்.

Related Tags :
Next Story