பாளையங்கோட்டை அருகே: இளம்பெண் பாலியல் பலாத்காரம் - டிரைவர் கைது
பாளையங்கோட்டை அருகே கத்தி முனையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டியை அடுத்த தெற்கு வெட்டிய பந்தி கிராமத்தை சேர்ந்த பாலு மகன் பாக்கியராஜ் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் சொந்த ஊருக்கு வந்து தோட்டத்துக்கு சென்றிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த பெண்ணை அவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது செல்போனில் அந்த பெண்ணை படம் பிடித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் சார்பில் சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அறிந்த பாக்கியராஜ் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் போலீசார், அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Related Tags :
Next Story