நடிகர்களின் கட்–அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல - ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேட்டி
மதுரை மாவட்ட மக்கள் பாதை இயக்கம் நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். அவர் பரிசுகளை வழங்கி, மாணவ, மாணவிகளை பாராட்டினார்.
மதுரை,
தமிழ்நாட்டை விட கல்வி அறிவு குறைவாக உள்ள வட மாநிலங்களில் கூட நடிகர்களின் கட்–அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் வழக்கம் கிடையாது. ஆனால் இங்கு அதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல. இந்த நடவடிக்கைகளில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இளைஞர்களை மாற்ற வேண்டும். கவுரவ கொலைகளை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவுரவ கொலைகளுக்கு எதிராக இந்த அமைப்பு தொடர்ந்து போராடும். தற்போது மக்கள் பாதை அமைப்பு இயக்கமாக மாறி உள்ளது. இது இனிவரும் காலங்களில் பல்வேறு பரிமாணங்களை சென்றடையும். நாங்கள் தமிழ்ச்சமூகத்தை விழிப்புணர்வுடன் இருக்கும் சமுதாயமாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஏழை–பணக்காரன், தமிழ் வழிக்கல்வி படிப்பவர்கள், ஆங்கில வழிக்கல்வி படிப்பவர்கள் என இரு பெரும் சமுதாயங்கள் நம் நாட்டில் உருவாகி உள்ளது. இது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. இதை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.