நெல்லையில்: ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேர் கைது


நெல்லையில்: ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2018 3:45 AM IST (Updated: 3 Dec 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் இசக்கி பாண்டி (வயது 32) ஆட்டோ டிரைவர்.

இவரை கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கி பாண்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையே சி.என். கிராமத்தை முருகன் மகன்கள் சுப்பிரமணியன் (25), பேச்சிமுத்து மற்றும் மானூர் ரஸ்தாவை சேர்ந்த கருப்பசாமி மகன் முகேஷ் என்ற மூக்காண்டி (25) ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த னர்.

நெல்லை சந்திப்பு துவரை ஆபீஸ் பகுதியை சேர்ந்த செந்தில் (24), மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிவா (23) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய் தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story