பெரணமல்லூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகள் அதிகாரி ஆய்வு
பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு,
அப்போது பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டப்பணிகள், சாலைகள் மற்றும் கட்டிடப் பணிகள், பசுமை வீடு ஆகியவை பற்றி ஆணையாளர் சவிதாவிடம் கேட்டறிந்தார்.
ஆணைபோகியில் இருந்து ஊர்குடி கிராமம் வரை அமைக்கப்பட்டு உள்ள தார்சாலை, தாடி நொளம்பையில் இருந்து செப்டாங்குளம் வரை அமைக்கப்பட்டு உள்ள தார்சாலை, செப்டாங்குளத்தில் உள்ள கசிவுநீர் குட்டை, செப்டாங்குளம் மோசவாடி ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் வளர்ச்சி மற்றும் பசுமை வீடு ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்யாறு ஊரக வளர்ச்சி முகமை (தணிக்கை) குருசாமி, ஒன்றிய பொறியாளர் கேசவன், ரமேஷ், சிவகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story